இயேசுக்கிறிஸ்து நான் தான் இறைவன் வேண்டும்என்னை வணங்குங்கள் என்றும் சொல்லியிருக்கிறாரா..? பாகம்-1

 

எப்பொழுதெல்லாம் இஸ்லாமிய சகோதரிகளிடம் கிறிஸ்தவத்தைக்குறித்தும் பரிசுத்த வேதகமத்தைக்குறித்தும் மற்றும் இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையைக்குறித்து பேசும் பொழுது உடனடியாகவே விவாதத்திற்கென்றே சில கேள்விகளை எழுப்புகிறார்கள் அதுமட்டுமல்லாமல் இஸ்லாமிய அறினர்களாகிய அஹ்மத் தீதாத் மற்றும் ஜாகிர் நாயக் அவர்களுடைய பிடித்த கேள்வியாகவும் இருக்கிறது வாங்க ஜாகிர் நாயக்  மூலமாகவே அந்த கேள்வியை தெரிந்துக்கொள்ளலாம்.

இஸ்லாமியர்களுடைய மிக முக்கியமானக் கேள்வி என்னவென்றால் இயேசு கிறிஸ்து நான் தான் இறைவன் என்றும் என்னை வணங்குங்கள் என்றும் வெளிப்படையாக எங்கேயுமே சொல்லவில்லை அதுமட்டுமல்லாமல் முழு வேதாகமத்தில் அப்படி ஒரு வசனம் இருந்தா காட்டுங்க நானும் கிறிஸ்தவராக மாறிவிடுகிறேன் என்று சொல்லுகிறதை நாம் கேட்டோம் ஆனால் குரானில் பார்க்கும் பொழுது குர்ஆனில் இயேசு கிறிஸ்துவை அல்லாஹ்வுடைய நபி அதாவது தீர்க்கதரிசியாக குறிக்கப்பட்டுள்ளது.

 முழு வேதாகமத்தில் இயேசு கிறிஸ்து நான் ஒரு தீர்க்கதரிசி என்று எங்கேயுமே சொல்லவில்லை அவர்கள் கேட்கும் வண்ணமாக நாமும் கேட்போமானால் முழுக்க குரானும் பொய்யாக மாறிவிடுகிறது ஒருவேளை நீங்க நினைக்கலாம் இயேசு கிறிஸ்து நான் தான் இறைவன் என்றும் என்னை வணங்குங்கள் என்று சொல்லியிருந்தால் அவர்கள் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டிருப்பார்கள் என்று ஆனால் அவர்கள் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் இப்படி பட்டதானாக் கேள்வியை கேட்கவில்லை கிறிஸ்தவத்தை இழிவு படுத்தவேண்டும் என்கிற நோக்கத்திலும் மற்றும் இயேசு கிறிஸ்து இறைவன் இல்லை அவர் ஒரு சாதாரண மனிதன் என்கிற நோக்கத்தில் இப்படிப்பட்டதானாக் கேள்விகளைக் கேட்கிறார்கள்.

நீதிமொழிகள் 26:5 வது வசனத்தை வாசிக்கும் பொழுது அந்த வசனம் இவ்வாறாக சொல்லுகிறது:-

5. மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான்.

வேதாகமம் மிகத் தெளிவாகக் கூறுகிறது மூடனுக்கு அவன் மதியீனத்தின் படி மறுஉத்தரவுக்கொடுக்க நம்மை வலியுறுத்துகிறது இந்தக் கேள்விக்கு பதிலைப்பார்ப்பதற்கு முன்பாக உங்களுக்கு ஒரு உதாரணத்தைக் கொடுக்கிறேன்.

உதாரணம்:-

ஒருமுறை என்னுடைய நண்பர் அப்துல்லாஹ் என்னை அவருடைய வீட்டிற்கு அழைத்திருந்தார் நானும் அவருடைய வீட்டிற்கு சென்ற பொழுது நாங்க பேசிக்கொண்டே இருக்கும் பொழுது அப்துல்லாவும் இதே கேள்வியைத்தான் கேட்டார் அதாவது முழு வேதாகமத்தில் இயேசு கிறிஸ்த்து நான் தான் இறைவன் என்றும் என்னை வணங்குங்கள் என்று ஏதாவது வசனம் இருக்குதா நான் சொன்னேன் அப்படி ஒரு வசனம் இல்லை அப்போ இயேசு கிறிஸ்து தானே நான் தான் இறைவன் என்றும் என்னை வணங்குங்கள் என்று சொல்லாத பட்சத்தில் நீங்க எப்படி அவரை இறைவனாக வணங்க முடியும் என்று நான் எதுவுமே சொல்லல கொஞ்ச நேரம் கழித்து அப்துல்லா அவருடைய குடும்பத்தை எனக்கு introduce  பண்ணுனாரு அதாவது இது என்னடைய மனைவி பாத்திமா என்றும் இது என்னுடைய மகன் இம்ரான் என்றும் அப்போ நான் உடனே அப்துல்லாவிடம் கேட்டேன் அப்துல்லா நீ தான் பாத்திமாவோட கணவன் என்றும் இம்ரான்வுடைய  தகப்பன் என்றும் சொல்லவே இல்லையே அப்துல்லா மிகவும் கோபம் அடைந்து என்ன முட்டாள் தனமான கேள்வியை நீ கேட்குற பாத்திமா என்னுடைய மனைவி என்றால் நான் பாத்திமாவுடைய கணவன் தானே இம்ரான் என்னுடைய மகன் என்றால் நான் இம்ரானுடைய தகப்பன் தானே அப்போ நான் கேட்டேன் அப்துல்லா நீ மிகத் தெளிவாக நான் பாத்திமாவுடைய கணவன் என்று சொல்லவேயில்லயே நீ சொல்லாத பட்சத்தில் எப்படி பாத்திமாவுடைய கணவனாயிருக்கமுடியும் என்று.

பாத்திங்களா இப்படிப்பட்டதான முட்டாள்தனமானக் கேள்விகள் தான் இஸ்லாமிய நண்பர்கள் கேட்கிறார்கள் ஆனால் இப்படிப்பட்டதானாக் கேள்வி உங்களிடத்தில் கேட்கும் பொழுது நீதிமொழிகள் 26:5 வசனத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் அதாவது மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின் படி மறுஉத்தரவு கொடுக்க வேதாகமம் நம்மை வலியுறுத்துகிறது.

இயேசுக் கிறிஸ்து தன்னைத்தானே இறைவன் என்றுச் சொல்லவில்லை அதனால் அவரை இறைவனாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லுகிறார்கள் அதாவது

நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள் என்று”.

இந்த வார்த்தை தான் அவர்களுக்குத்தேவை இப்போ நான் சொல்லுகிறேன் நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்

         1.அப்போ என்னை இறைவனாக ஏற்றுக்கொள்வீர்களா..?

       2.என் மீது நம்பிக்கை வைத்து என்னை இறைவனாக வணங்குவீர்களா..?

அதுமட்டுமல்லாமல் தெரு தெரு வா போய் நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள் இப்படி நான் சொன்னா என்னக்கு பைத்தியக்கார பட்டம் கொடுத்துவிடுவார்கள் அப்போ நீங்களே ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் எப்படி இயேசு கிறிஸ்து போய் ஒவ்வொருவரிடமும் நான் தான் இறைவன் என்று சொல்ல வேண்டும் என்று நீங்க நினைக்கிறீங்க… இயேசுக் கிறிஸ்து இந்த பூமியில வாழ்ந்த காலத்தில் யூதர்கள் மிகத்தெளிவாக அறிந்திருந்தார்கள் இயேசுக் கிறிஸ்து தன்னைத்தானே இறைவன் என்று சொல்லுகிறார் அதாவது

1.இறைவனோடு ஒப்பிட்டுக்காண்பிக்கிறார்.

2.இறைவனுடைய குமாரன் என்றுச்சொல்லுகிறார்.

ஒருவேளை நீங்க சொல்லுகிறபடிப் பார்த்தால் இயேசுக் கிறிஸ்து தன்னைத்தானே இறைவன் என்றுச் சொல்லவில்லை என்றுச் சொல்வோமானால் ஏன் இயேசுக் கிறிஸ்துவை சிலுவையில் அறைய வேண்டும் இயேசுக் கிறிஸ்துவை சிலுவையில் அரைவதற்கான மிக முக்கியக் காரணம் இயேசுக் கிறிஸ்து தன்னைத்தானே இறைவன் என்று சொன்னதற்க்காகவே. ஒருவேளை நான் வந்து நான் தான் இறைவன் என்றுச் சொல்வேனானால் நீங்க என்னைச் சொல்லுவீங்க ஆதாரம் இருக்கா..!

 அப்போ இறைவன் என்றுச் சொல்வதைக்காட்டிலும் ஆதாரத்தைக் காண்பிப்பது தான் மிக முக்கியம் அப்போ இயேசுக் கிறிஸ்து ஆதாரத்தைக் காண்பித்திருக்ககிறாரா..?

 ஆம்  வேதாகமத்தில் அநேகமான வசனம் இருக்கிறது இயேசுக் கிறிஸ்துதான் இறைவன் என்று அந்த ஆதாரத்தைப் பார்த்தும் நீங்கள் இயேசுக் கிறிஸ்துவை இறைவனாக ஏற்றுக்கொள்ளாவிட்டால் இறைவனின் பார்வையில் அது மிகப்பெரியாக் குற்றமாயிருக்கிறது அப்போ இயேசுக் கிறிஸ்து தான் இறைவன் என்று சொன்னதற்கான ஆதாரத்தை நாம் அதுத்த பாகம்-2  பார்க்கப்போகிறோம்.

1 comment:

  1. Nice arricle bro. God bless you.
    https://siluvayadi.blogspot.com/search/label/கேள்வியும்%20பதிலும்?m=1

    ReplyDelete

Thank you for reading this article/blog! We welcome and appreciate your opinion in the comments!